Ticker

6/recent/ticker-posts

Ad Code

2023 ஆம் ஆண்டு ராசி பலன்கள் / 2023 Raasi palan in tamil / Jegathees meena

    இந்த 2023 ஆம் ஆண்டு அனைவருக்கும் உடல், மனம், பொருளாதாரம், படிப்பு, தொழில், வேலை என அனைத்தும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். அனைத்து ராசிக்கும்  இந்த ஆண்டு எப்படி அமையும் என்பதை பார்க்கலாம்.

2023 ஆம் ஆண்டு ராசி பலன்கள்

மேஷம்:

  • கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். அவர்கள் தேர்வு நன்றாக எழுதி படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்
  • திருமணம் செய்யும் வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  •  வேலை மாற்றம் நிகழவும் வாய்ப்புகள் அதிகம். 
  • தொழிலுக்காக கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தொழிலில் லாபம் கிடைக்கும்.
  • வயிறு தொடர்பான பிரச்சனைகள், அஜீரணம் இருக்கலாம்.
  • குடும்பத்தில் சகோதரர்கள் உதவி கிடைத்தாலும் சிறு சிறு சண்டை வரவும் வாய்ப்பு உள்ளது.
  • வீடு வாங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
  • மேஷ ராசிக்கு பலன்கள் கிடைக்கும் வருடம் இந்த வருடம். எல்லாம் நல்லதாகவே நடக்கும். 
  • தேவையற்ற செலவுகள் குறையும். 
  • இல்லத்தரசிகள் கணவனுடன் வரும் சண்டயை பெரிது படுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் கோபத்தை குறைக்க வேண்டும்

ரிஷபம்:

  • இந்த ஆண்டு அற்புதமான ஆண்டு 2023ஆம் ஆண்டு.
  • திருமணத்திற்கு ஏற்ற காலம். கூடி வரும் வேலையில் திருமணம் செய்வது நல்லது
  • நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் வெற்றி கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.
  • சந்தேகம் மற்றும் பயம் இடையூறு ஏற்படுத்தலாம். அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
  • முதல் மூன்று மாதங்களில் சுப காரியம் நிகழும். 
  •  குடும்பத்தில் கொஞ்சம் கவனம் தேவை. குழந்தைகள் வாக்குவாதம் செய்வார்கள். 
  • கடன் தொடர்பான கவலைகள் இருக்கலாம்.
  •  படிப்பில் கவன சிதறல்கள் இருக்கும். மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • உடல் சம்பந்தப்பட்ட உபாதைகளில் அலட்சியம் வேண்டாம்.
  • பணி சுமை அதிகரிக்கலாம். 
  • கர்ப்பிணி பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

மிதுனம்:

  • அதிர்ஷ்டம் கொடுக்கும் ஆண்டு இந்த 2023ஆம் ஆண்டு. சுப பலன்கள் கிடைக்கும். 
  • குழந்தை ப்ராப்த்தம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்
  • அலைச்சல் அதிகமாக இருக்கலாம். 
  • பாராட்டு, அங்கீகாரம், புகழ் இவையெல்லாம் கிடைக்கும்.
  • தைரியம் கூடும். தான் தைரியமாக இருப்பதோடு பிறர்க்கும் தைரியம் கொடுப்பர். 
  • தொழிலில் உள்ள பிரச்சனைகள் தீரும். 
  • இந்த ஆண்டில் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும். சேமிப்பு அதிகமாகும்.
  • படிப்பில் மற்றும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகம்.
  • இல்லத்தரசிகள் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது.

கடகம்:

  • பிள்ளைகளின் படிப்பு சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கும். 
  • வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டு பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம்.
  • வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை.
  • திருமணம் கைக்கூடும் ஆண்டு. எளிமையாக திருமணம் செய்வது நல்லது
  • தொழிலில் பிறர் கூறுவதை அப்படியே நம்ப வேண்டாம்.
  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம்.
  • பயணதில் கவனம் தேவை.
  • பெண்கள் வீட்டில் சிறப்பாக நிர்வாகம் செய்வர்.
  • அரசியலில் பெரும் பொறுப்புகள் தேடி வரும்.

சிம்மம்:

  • கவனமாக முடிவு செய்ய வேண்டும்.
  • பண வரவு இருக்கும். சுய தொழில் செய்து வெற்றி காண்பீர்கள்.
  • புது வீடு, புது மனை வாங்க ஏற்ற காலம் அல்ல. இருப்பதை தக்க வைத்து கொள்ளுங்கள். 
  • குடும்ப விஷயங்களை பிறரிடம் கூற வேண்டாம்.
  • குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சோம்பல் இருக்கலாம்.
  • பெண்கள் பிறர் வீட்டு பிரச்சனைகளில் தலையிட வேண்டாம்.
  • பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும்.
  • எதிர்பாரத செலவுகள் இருக்கலாம்.
  • இந்த ஆண்டில் சுப காரியங்கள் நிகழும்.

கன்னி:

  • பொருளாதரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
  • வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்
  • கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். 
  • மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
  • தேவையற்ற சண்டைகளை தவிர்ப்பது நல்லது.
  • ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • அரசியலில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது
  • செலவுகள் இருக்கும். ஆனால் பண வரவுகளும் இருக்கும்.
  • குடும்பத்தில் இருந்த கசப்புகள் நீங்கும்.
  • திடீர் பயணங்கள் இருக்கும்.

துலாம்:

  • பெண்களுக்கு யோகம் கிட்டும். லாபம் அதிகமாக இருக்கும்.
  • திருமணம், புத்திர பாக்கியம் கிடைக்கும் காலம் இது.
  • வெளிநாட்டு பயணம் அமையும்.
  • குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மன கசப்புகள் நீங்கி சந்தோஷம் பிறக்கும்
  • பிறர் கூறுவதை நம்ப வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்
  • பழைய கடன்களை அடைப்பீர்கள்.
  • பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. 
  • குழந்தைகள் விஷயத்தில் சிறு சிறு கவலைகள் வந்து செல்லும்
  • தொழிலில் அக்கறை தேவை. 
  • பெற்றவர்கள் கூறுவதை கேட்டு நடப்பது நல்லது.

விருச்சிகம்:

  • வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரதத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்
  • பிள்ளைகளின் படிப்பு அல்லது வேலை தொடர்பாக பிரிவு ஏற்படலாம்.
  • வீட்டை விரிவு செய்து கட்டுவீர்கள். வீடு மாறவும் வாய்ப்புகள் அதிகம்
  • பயணத்தில் கவனம் தேவை.
  • உறவிகளிடம் பேசும் போது வார்த்தைகளில் தேவை.
  • எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கும் தைரியம் கிடைக்கும்
  • மறைமுக எதிரிகளால் தொல்லை இருக்கலாம்.
  • வேலை பழு அதிகரிக்கும். குடும்பதோடு செலவு செய்யும் நேரம் குறையும்
  • மாணவர்களுக்கு தேர்வில் சில தடைகள் ஏற்படலாம். ஆனல் தடைகளை தகர்த்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
  • இல்லத்தரசிகள் நிம்மதியாக இருப்பீர்கள்.

தனுசு:

  • தனுசு ராசி நேயர்கள் பாராட்டுகள் அதிகம் பெறும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்
  • தொழிலில் மிக பெரும் வெற்றி கிடைக்கும்
  • பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை
  • பெண்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்
  • வழக்கில் சாதகமான தீர்ப்பு இருக்கும்.
  • கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்த்தாபங்கள் குறையும்
  • இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
  • வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு இருக்கும்
  • மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஊக்கம் அதிகமாக இருக்கும்
  • பயத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மகரம்:

  • வீடு, வாகனம் வாங்கும் யோகம் இருக்கும் ஆண்டு இந்த ஆண்டு.
  • வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
  • தொழிலில் கவனம் அவசியம். அலட்சியம் காட்டாமல் தொழிலை வளர்க்க முயற்சி செய்யுங்கள்
  • பெரிய இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்
  • கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் இருக்கும். வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது
  • செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு செய்வது மிக முக்கியம்
  • மன உளைச்சல் இருக்கும். 
  • திருமணம் நிகழும் சாதகமான ஆண்டு இந்த 2023ஆம் ஆண்டு.
  • சந்தான பாக்கியம் கிடைக்கும்.
  • மாணவர்களுக்கு படிப்பில் எந்த பிரச்சனையும் இருக்காது

கும்பம்:

  • சுப காரியம் நிகழும். பண வரவு இருக்கும்.
  • வாகனத்தில் கவனம் தேவை.
  • கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரி ஆகும்.
  • லாபம் அதிகமாக இருக்கும்
  • பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். 
  • சோம்பல் அதிகமாக இருக்கும். 
  • மாணவர்கள் படிக்க நினைப்பதை படித்து முடிப்பீர்கள். 
  • மன உளைச்சல் இருக்கும். 
  • இல்லத்தரசிகளுக்கு சாதகமாக இருக்கும் இந்த ஆண்டு. 
  • உறவுகளுக்கிடையே இருந்த மன கசப்பு சரி ஆகும்
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்ததை முடிப்பீர்கள்.

மீனம்:

  • வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகம்.
  • தடைப்பட்ட சுப காரியங்கள் நல்ல படியாக நிகழும்.
  • வீண் பழி உங்கள் மீது விழும்.
  • வீண் செலவு, கடன்கள் வந்து செல்லும்.
  • அதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து சில விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
  • மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்
  • வழக்குகளில் தீர்பு தள்ளி போகலாம். ஆனால் சாதகமான தீர்ப்பு தான் கிடைக்கும்
  • கடின உழைப்பால் நல்ல பலனை எதிர் பார்க்கலாம்
  • பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி பெருகும்.
  • வியாபரிகளுக்கு மே மாதத்திற்கு பிறகு லாபம் அதிகரிக்கும்
இந்த பலன்கள் அனைத்தையும் உங்கள் மனத்தில் கொண்டு சிறப்பாக வாழ்வை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் ராசியை கீழே கமென்ட் செய்யுங்கள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்!

Ad Code