நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படம் திரைக்கு வந்து உள்ளது. அந்த படத்தின் ப்ரொமொஷனுக்காக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் மாளவிகா மோஹனன் தன்னை பற்றி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மாளவிகா மோஹனன் ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் நடிகை ஒருவர் மருத்துவமனையில் சோகமான காட்சியில் பக்காவாக மேக் அப் செய்து, முடியை நன்றாக சீவி நடித்துள்ளது ஆச்சரியத்தை தருவதாக நயன்தாராவை மறைமுகமாக சாடியுள்ளார்.
இந்த நேர்காணலை பார்த்த நயன்தாரா தனது கனெக்ட் படத்தின் ப்ரொமொஷக்கான பேட்டியில் தன்னை பற்றி ஒரு நடிகை பெயர் குறிப்பிடாமல் கூறியதாகவும், மருத்துவமனை காட்சி என்பதற்காக முடியை சீவாமல் விரித்து போட்டு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். நிஜ வாழ்க்கை படங்களுக்கும் இது போன்ற படங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கூறியதோடு தனது தயாரிப்பாளர் கூறுவதற்கு ஏற்ப, படத்திற்கு ஏற்ப தான் நான் நடிப்பேன் என்று தக்க பதிலடி கொடுதுள்ளார்.
இந்த நேர்காணலை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் அந்த நடிகையின் பெயரை அவர் கூறாததால் அவரை வலை வீசி தேடி வந்தனர். பின் அந்த நடிகையை கண்டு பிடித்து மாளவிகா மோஹனனை 'பவுடர் மூஞ்சி' என்று கலாய்த்து வருகிறார்கள்.