கருங்கோழி பற்றி கேள்வி பட்டது உண்டா? அதன் முட்டைக்கு இவ்வளவு மதிப்பா? அதன் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்த்தால் முழு பதிவையும் படித்துவிட்டு கீழே உங்கள் எண்ணங்களை கமெண்ட் செய்யுங்கள்.
கொஞ்ச காலங்களாகவே கருங்கோழி என்று அழைக்கப்படும் கடக்னாத் கோழியின் பேச்சு பரவலாக இருந்தது. இந்தியாவில் இப்பொழுது இந்த கோழியை வளர்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கருங்கோழி வளர்ப்பவர்கள் இன்று பெரும் லாபம் பார்க்கின்றனர். காரணம் அதன் மருத்துவ குணங்களே! இது மத்ய ப்ரதேசத்தின் கோழி வகை.
தோற்றம்:
கருங்கோழி பார்ப்பதர்க்கு கருப்பு தோள், கருப்பு முடி, கருப்பு கொண்டையுடன், கருப்பு வாயுடன் காட்சியளிக்கும். சிலர் இதன் ரத்தம் கருப்பாக இருப்பதாக கூறுவர். ஆனால் அது உண்மை இல்லை. அதன் ரத்தம் அடர் சிவப்பு நிறம் ஆகும். குஜராத்தில் இந்த கோழியின் கரியை குழந்தைகளுக்கு கொடுக்கபடுவதும் குறிப்பிடத்தக்கது.
கருங்கோழி ஆறு மாதத்தில் முட்டை போட துவங்கும். வருடத்திற்கு 120 முதல் 140 முட்டைகள் போடும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு முட்டையை அடை காக்கும் பழக்கம் இல்லை. அதனால் செயற்கையாகவோ அல்லது நாட்டு கோழியின் உதவியிலோ குஞ்சுகள் பொறிக்கும்.