பிரபல இளம் நடிகை சாக்ஷிஅகர்வால் தமிழ், கன்னடம், மற்றும் மலையாளம் படங்களிள் நடித்துள்ளார். இவர் தமிழில் ராஜா ராணி, காலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சாக்ஷிஅகர்வால், 2019 ஆம் ஆண்டு தமிழில் நடந்த பிக் பாஷ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார். 105 நாட்கள் நடந்த அந்த பிக் பாஷ் சீசன் 3 நிகழ்ச்சியில் 49 ஆவது நாளில் சாக்ஷிஅகர்வால் வெளியேறினார். பிக் பாசிற்கு பின்னர் விஸ்வாசம், அரண்மனை 3, டெடி, சின்ட்ரெல்லா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சாக்ஷிஅகர்வால் தற்போது நடித்திருக்கும் படம் "நான் கடவுள் இல்லை". இப்படத்தை இயக்கியவர் எஸ். எ. சந்த்ரசேகர். நேற்று இப்படம் ரிலீசாகி உள்ளது. இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வந்த "கூல் சுரெஷ்" பேட்டியாளர்களிடம் ' எஸ். எ. சந்த்ரசேகர் இயக்கிய படம் என்பதால் சற்று பழைய கருத்துக்களை கொண்ட படமாக இருக்கும் என எண்ணி படத்தை பார்க்க வர வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் எஸ். எ. சந்த்ரசேகர் தற்போது இருக்கும் இளம் இயக்குநர்களைப் போல தற்போதய தலைமுறைக்கு பிடிக்குமாறு இப்படத்தை இயக்கி உள்ளார்' என்று கூறினார்.
பின்னர், 'நீங்க தப்பா எடுத்துப்பீங்க இருந்தாலும்... என் செல்லக்குட்டி' என்று கூறி சாக்ஷிஅகர்வாலுக்கு மூன்று முறை முத்தம் கொடுத்தார். அது மட்டுமின்றி சாக்ஷிஅகர்வால் தோளின் மேல் கைபோட்டுக்கொண்டு லேடி ஜேம்ச் பாண்ட் எனவும் என் காதலி எனவும் கூறியுள்ளார். இப்படத்தில் உள்ள வசனங்கள் நன்றாக இருப்பதாகவும் குறிப்பாக ' நீ பொண்டாட்டியா நா பொண்டாட்டியா...' போன்ற வசனங்கள் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.
கூல் சுரேஷ் செய்த இந்த காரியம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. ஒரு இளம் நடிகைக்கு செய்தியாளர் சந்திப்பின் போது முத்தம் கொடுப்பது எவ்வளவு தவறு என உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.