வீட்டு விசேஷங்களுக்கு நாம் பால் பாயாசம், அடை பாயாசம், அரிசி பாயாசம், பருப்பு பாயாசம் என பல பாயாசங்கள் செய்துருப்பீர்கள். ஆனால் இது பலரும் செய்யக்கூடிய வகை பாயாசங்களாக மாறிவிட்டது. குழந்தைகளும் புது வகை பாயாசங்களை தான் விரும்புகின்றனர்.
அதனால் இன்று நாம் மிகவும் வித்தியாசமான கேராமல் பாயாசம் தான் செய்ய போகிறோம். குழந்தைகள் இந்த வகை பாயாசத்தை விரும்பி சாப்பிடுவர்.
Step 1:
ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து, 50 கிராம் சேமியாவை வறுத்து கொள்ளுங்கள். பிறகு அரை லிட்டர் பால் சேர்த்து சேமியாவை வேக வைக்க வேண்டும்.
Step 2:
சேமியா வெந்த பிறகு 30 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்த ஜவ்வரிசியை பாயாசத்தில் சேர்த்து கிளருங்கள்
Step 3:
மற்றொரு கடாயில் 3/4 கப் அளவு சீனியை குறைந்த சூட்டில் வைத்து நல்ல கிளருங்கள். 10 நிமிடம்/15 நிமிடத்தில் சீனி நன்கு இளகி ப்ரௌன் நிறத்திற்கு வந்தவுடன்1 மேஜைக்கரண்டி வெந்நெய் சேர்த்து கொள்ளுங்கள். கேராமல் தயாராகிவிட்டது
Step 4:
உடனே இந்த கேராமலை பாயாசத்தில் ஊற்றி கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி திராட்ச்சை சேர்த்து பாத்திரத்தை இறக்கிவிடுங்கள். சுவையான வித்தியாசமான கேராமல் பாயாசம் தயார்.