இந்த வெயில் காலத்தை சமாளிக்க கடந்த பதிவில் நான் சில டிப்ஸ் கொடுத்துள்ளேன். வெயில் காலங்களில் தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால் பல உடல் உபாதைகள் வர வாய்ப்புகள் உள்ளது. வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன் தண்ணீர் குடித்தாலும் நமக்கு எதாவது ஜூஸ் குடித்தால் தான் திருப்தியாக இருக்கும்
இன்று நாம் நான்கு சுவையான குளிர்ச்சியான ஜுஸ் செய்யபோகிறோம்.
இளநீர் ஜுஸ்:
தேவையான பொருட்கள்:
- இளநீர்
- இளநீர் தேங்காய்
- சீனி
செய்முறை:
- முதலில் இளநீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் உள்ள தேங்காயை தனியாக கீறி எடுத்து கொள்ளுங்கள்.
- இளநீர் தேங்காயை இளநீர் மற்றும் சீனி சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
- ஒரு கண்ணாடி டம்ப்ளரில் இந்த இளநீர் ஜுஸை பனிகட்டி சேர்த்து பரிமாறுங்கள்.
நுங்கு ஜுஸ்:
தேவையான பொருட்கள்:
- நுங்கு - 6
- இளநீர் - தேவையான அளவு
- இளநீர் தேங்காய் - 4 மேஜைக்கரண்டி
- சீனி - தேவையான அளவு
செய்முறை:
- இளநீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இளநீரை ரெண்டாக வெட்டி அதில் உள்ள தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள்
- நுங்கு, இளநீர், இளநீர் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு தேவைபட்டால் சீனி மற்றும் பனிகட்டி சேர்த்து கொள்ளலாம்
தர்பூசணி ஜுஸ்:
தேவையான பொருட்கள்:
- தர்பூசணி
- சப்ஜா விதைகள் - 2 மேஜைக்கரண்டி
- பனிகட்டி
செய்முறை:
- முதலில் ஒரு கண்ணாடி டம்ப்ள்ரில் 2 மேஜைக்கரண்டி பனிகட்டி சேர்த்து கொள்ளுங்கள்.
- பின் 2 மேஜைக்கரண்டி சப்ஜா விதைகளை சேர்த்து கொள்ளுங்கள்
- அதற்கு மேல் 2 மேஜைக்கரண்டி தர்பூசணி துண்டுகள் சேர்த்து கொள்ளுங்கள்
- பின் தர்பூசணியை சீனி சேர்த்து அரைத்து அதை டம்ப்ளரில் சேர்த்து கொள்ளுங்கள். சுவையான தர்பூசணி ஜூஸ் தயார்.
கிர்ணி ஜூஸ்:
தேவையான பொருட்கள்:
- கிர்ணி பழம் - அரை பழம்
- சீனி- தேவையான அளவு
செய்முறை:
- கிர்ணி பழத்தை இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும்விதைகலை எடுத்து விட்டு பழத்தை தனியாக எடுத்து கொள்ளுங்கள்.
- சிறு துண்டுகளாக பழத்தை வெட்டி அதை பனிகட்டி சீனி சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்
- அதை ஒரு கண்ணாடி டம்ப்ளரில் மாற்றி பாதாம் முந்திரி தூவி அதை பரிமாறுங்கள்
வெயில் காலத்திற்கு ஏற்ற நாங்கு முக்கிய ஜூஸ்களை நான் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு வெயில் காலத்திற்கு ஏற்ற ஜூஸ் எதுவும் தெரிந்திருந்தால் கீழே பதிவிடுங்கள்!