Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்த 5 கிச்சன் டிப்ஸ் உங்க சமையலை எளிதாக்கும், நேரம் வீணாகம பாத்துக்கும்/ Jegathees meena

     சமையலுக்கு ரெசிபி பார்க்கும் தாய்மார்களை காட்டிலும் சமையல் குறிப்புகள் பார்க்கும் தாய்மார்கள் அதிகம். நான் இன்று மக்களுக்கு தேவைப்படும் சில முக்கிய சமையல் குறிப்புகளை உங்களோடு பகிற விரும்புகிறேன்

இந்த 5 கிச்சன் டிப்ஸ்  உங்க சமையலை எளிதாக்கும்


1) பொதுவாக பிரியாணி அல்லது குருமா செய்யும் தாய்மார்கள் செய்யும் மிகப்பெரிய தவறு கடையில் விற்கும் இஞ்சி பூண்டு விழுது பயன்படுட்துவது. அதற்கு பதிலாக நீங்கள் வீட்டிலயே இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது செய்து அதை ஐஸ் ட்ரேவில் ஊற்றி வைத்து 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம். 

2) நீங்கள் சாதம் வடித்து சாப்பிடுபவராக இருந்தால், சாதம் குழைந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால் பதற்றம் அடையாமல் 2 தேக்கரண்டி நல்லெண்ணை சேர்த்து விடுங்கள். சாதம் குழையாமல் இருக்கும்

3) கறிவேப்பிலை கிடைக்கும் போது நிறையா பறித்துக் கொள்ளுங்கள். பின் இதை நன்றாக இலையை மட்டும் உருவி ஒரு கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்

4) பச்சை மிளகாய் அழுகாமல் இருக்க காம்புகளை நீக்கி அதை 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு மூடி போட்டு குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்

5) வெங்காயத்தயும் உருளைகிழங்கயும் சேர்த்து வைக்காதீர்கள். உருளைகிழங்கில் பூஞ்சைகள் சீக்கிரம் வருவதற்கு அதுவே காரணம். 

Ad Code